×

ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் ரோபோடிக் சிகிச்சை மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்தியாவிலேயே, மாநில அரசு மருத்துவமனைகளில் முதலாவதாக சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த அதிநவீன ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் வாயிலாக கடினமான அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாகவும் நுணுக்கமாகவும், ரோபோடிக் கருவிகள் மூலம் மேற்கொள்ள இயலும். ரோபோடிக் அறுவை சிகிச்சையின்போது, நோயாளியின் உடம்பில் சிறிய தழும்புகளே ஏற்படுவதால், ரத்த இழப்பு, வலி மற்றும் நோய்த்தொற்று பெரிதும் குறைவதோடு, அறுவை சிகிச்சையின் பின் வலி நிவாரண ஊசிகள் அதிகம் தேவைப்படுவதில்லை. சிறுநீரக அறுவை சிகிச்சை, குடல்நோய் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை ஆகிய அறுவை சிகிச்சைகளுக்கு இந்த அதிநவீன இயந்திரம் பயன்படும். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, அரசு மருத்துவ உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்….

The post ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் ரோபோடிக் சிகிச்சை மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Robotic Therapy Center ,Omanturar Government Multipurpose Hospital ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Robotic treatment center ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...